மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி வீரர்கள் சாதனை
13-Dec-2024
கடலுார்; மலேசியாவில் நடந்த ஆசிய பசிபிக் காது கேளாதோருக்கான சர்வதேச தடகளப்போட்டியில் கடலுாரைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் கார்த்திக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.பத்தாவது ஆசிய பசிபிக் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுப்போட்டிகள், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் டிச.1ம் தேதி துவங்கி டிச.8ம் தேதி வரை நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் 8 தங்கம், 18 வெள்ளி மற்றும் 29 வெண்கல பதக்கங்களுடன் ஐந்தாம் இடத்தைப்பிடித்தனர். இதில் கடலுாரைச் சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவர் கார்த்திக், 110மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் பங்கேற்று, இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றார். பதக்கம் வென்ற கார்த்திக்கை, பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
13-Dec-2024