உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கு

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில், நிலையான விவசாய நடைமுறைகள் மற்றும் வளர்ச்சிகள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இணை பேராசிரியர் நிர்மல்குமார் வரவேற்றார்.புதுச்சேரி மாநில உயர்கல்வி கவுன்சிலர் உறுப்பினர் ராமானுஜம், மெட்ராஸ் தாவரவியல் பல்கலைகழகத்தில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான தலைமை மைய முன்னாள் இயக்குனர் மதிவாணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர். துபாய் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ரவீந்தர்சிங், மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.தாவரவியல் துறை இணை பேராசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை