உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டுறவு நிறுவன உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு

கூட்டுறவு நிறுவன உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நடந்தது.கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான திலீப்குமார் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் என 80 பேர் நேர்முகத் தேர்வு பணியில் ஈடுபட்டனர். இதில், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.அப்போது, துணைப்பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அன்பரசு, சரக துணைப்பதிவாளர்கள் துரைசாமி, ரங்கநாதன், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் இம்தியாஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் எழில்பாரதி, டான்பெட் துணைப்பதிவாளர் வைரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை