உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாசன வாய்க்கால் துார்வாரும் பணி

பாசன வாய்க்கால் துார்வாரும் பணி

சேத்தியாத்தோப்பு, ; சேத்தியாத்தோப்பு பொதுப்பணித்துறை சார்பில் கிளாங்காடு பாசன வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் கடைமடை டெல்டா பகுதி யில் தமிழக முதல்வரின் காவிரி திட்டத்தில் பாசன வாய்க்கால்கள் துார்வாரும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், சிதம்பரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டு, வெள்ளாறு ராஜன் வாய்க்கால்களின் கிளாங்காடு பகுதி நிலங்களின் பாசனத்திற்கு செல்லும் கிளை வாய்க்கால்கள் துார்வாரும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.அணைக்கட்டு பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான் ஆகியோர் பழைய முரட்டு வாய்க்கால், பாழ்வாய்க்கால் ஆகிய இடங்களில் நடக்கும் துார்வாரும் பணியை நேற்று ஆய்வு செய்தார். பின், துார்வாரும் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டுமென, பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி