உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கடலுார் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கூடலையாத்துார் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் திருப்பால், முத்துமுருகன், ஒன்றிய தலைவர் சந்தானகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சக்திவேல், பிச்சமுத்து, திரிசங்கு, பஞ்சநாதன் முன்னிலை வகித்தனர். கலியமூர்த்தி வரவேற்றார்.மாநில தலைவர் விசுவநாதன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், வரும் 13ம் தேதி சிதம்பரத்தில் நடைபெற உள்ள கடலுார் பொதுக்குழு கூட்டத்திற்கு சங்க நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.விவசாய சங்க கிளைத தலைவர்கள் ராஜ்மோகன், பாலாஜி, நீலவண்ண கண்ணன், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மதுவானைமேடு குகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை