முட்செடிகளில் மனித எலும்பு கூடு மாயமான சிவகங்கை வாலிபரா?
விருத்தாசலம்:அரியலுார் அடுத்த காட்டூர் ரயி ல் நிலையம் அருகே முட்செடிகளில் கிடந்த எலும்பு கூடு, தாம்பரத்தில் மாயமான சிவகங்கை வாலிபராக இருக்குமா என, விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். காணவில்லை சிவகங்கையை சேர்ந்தவர் வீரபத்திரன். சென்னை, தாம்பரத்தில் தங்கி நெய் வியாபாரம் செய்கிறார். இவர், கடந்த மாதம் 17ம் தேதி, தனது மகன் பாண்டி, 25, என்பவரை காணவில்லை என, தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, பாண்டியின் மொபைல் எண் அழைப்புகள் குறித்து விசா ரித்தனர். இதில், திருச்சி அடுத்த லால்குடி, காட்டூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே அவரது மொபைல் போனை ஆடு மேய்க்கும் வாலிபர் ஒருவர் பயன்படுத் தி வந்தது தெரிந்தது. தகவலறிந்த தாம்பரம் போலீசார், லால்குடி போலீசாருடன் இணைந்து, வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில், காட்டூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தையொட்டி, மொபைல் போன் கிடந்ததாகவும், அதில் சிம்கார்டை அகற்றிவிட்டு, பயன்படுத்தி வந்ததாகவும் கூறினார். வாலிபர் கூறிய இடத்திற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அ ப்போது, ரயில் பாதையொட்டி கருவேல முட்செடிகளில், முழுவதும் உடல் சிதைந்த நிலையில், எலும்புக்கூடு கிடந்தது. விருத்தாசலம் ரயில்வே இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான போலீசார் சென்று, எலும்புக்கூடுகளை மீட்டு, அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆலோசனை ரயிலில் சிவகங்கைக்கு பாண்டி செல்லும்போது, தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். அதே சமயம் இன்று மருத்துவக் குழுவினர் ஆலோசனையின்படி, வீரபத்திரனிடம் டி.என்.ஏ., பரிசோதனை செய்வதா அல்லது வேறு முடிவுகளில் உறுதிபடுத்த முடியுமா என்பது தெரிய வரும் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.