உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவிகளுக்கு பலா சாகுபடி பயிற்சி

வேளாண் மாணவிகளுக்கு பலா சாகுபடி பயிற்சி

விருத்தாசலம்; பண்ருட்டியில் இயற்கை முறையில் பலா சாகுபடி குறித்து வேளாண் மாணவிகள் பயிற்சி பெற்றனர்.திருவண்ணாமலை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இளங்கலை நான்காம் ஆண்டு மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். இவர்கள், பண்ருட்டி அடுத்த மாளிக்கம்பட்டு கிராமத்தில் பலா மர சாகுபடி குறித்து பார்வையிட்டனர். முன்னோடி விவசாயி ராமசாமி பலா சாகுபடி குறித்து எடுத்துரைத்தார். மேலும் 250 ஆண்டுகள் பழமையான ஆயிரம் காச்சி மரத்தின் சிறப்புகள் குறித்து விளக்கமளித்தார்.பின், தனியார் நாற்றாங்கால் உரிமையாளர் கோபிகிருஷ்ணன் நாட்டு ரக பலாக்கள், அதிக பழங்கள் காய்த்தால், சில பழங்களை நீக்கி, மீதமுள்ள பழங்கள் நன்கு முதிர்வதற்கு தேவையான இடத்தை அளிக்கும் போன்ற தகவல்களை மாணவிகளுடன் பகிர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை