மேலும் செய்திகள்
தல்லாகுளம் முனீஸ்வரர் கோயிலில் பூஜை
21-Jun-2025
கடலுார் : கடலுார் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் உள்ள சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் ஆனி மாத ஜெயந்தி விழா நடந்தது.கடலுார், திருவந்திபுரம் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் உள்ள சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் ஆனி மாத ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாஜனம், ஸ்தபன பூஜை, மகா சங்கல்பம் நடந்தது.தொடர்ந்து, சுகப்பிரம்ம மகரிஷிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சபரி குருக்கள், பூஜைகளை செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகி சம்பத்குமார், விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
21-Jun-2025