குறிஞ்சிப்பாடியில் ஜெ., நினைவு தினம்
கடலுார்; கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க,. சார்பில் ஜெ., நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.குறிச்சிப்பாடியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியம், தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், கமலக்கண்ணன், பாஷ்யம், வினோத், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதால், நெய்வேலியில் உள்ள ஜெ., சிலைக்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.