உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா

கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா

கடலுார்; கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 18வது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு கிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளை தலைவர், கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் இளங்கோ வரவேற்றார். துபாய் மெக்கட்ரானிக்ஸ் குழுமத்தின் நிறுவன தலைவர் ஸ்டான்லி டேனியல், சிறப்பு விருந்தினராக பங்கேற்று 310பொறியியல் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற ஏழு மாணவ, மாணவிகள் மற்றும் ஒவ்வொரு துறையிலும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள், சான்றிதழ்கள், ரொக்க பரிசுகள், விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் ஞானசவுந்தரி, செயலாளர் விஜயகுமார், முதன்மை செயலர் டாக்டர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பட்டதாரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் ரகு நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், உதவி பேராசிரியர்கள் சதீஷ்குமார், சிவரஞ்சனி மேற்பார்வையில் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி