மேலும் செய்திகள்
பயணி தவறவிட்ட 27 சவரன் நகையை ஒப்படைத்த கண்டக்டர்
11-Oct-2025
பரங்கிப்பேட்டை: கீழே கிடந்த ஆறரை சவரன் நகையை, போலீசில் ஒப்படைத்தவரை அனைவரும் பாராட்டினர். பரங்கிப்பேட்டை அடுத்த சில்லாங்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதாசிவம், 35; பூ வியாபாரி. இவர் நேற்று முன்தினம் வங்கியில் அடமானம் வைத்திருந்த ஆறரை சவரன் நகையை மீட்டு ஒரு பையில் வைத்துக்கொண்டு சைக்கிளில் பரங்கிப்பேட்டை பகுதியில் பூ விற்பனை செய்தார். வியாபாரம் முடிந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது, நகை பையை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்தவர், வியாபாரம் செய்த பகுதிகளுக்கு சென்று நகையை தேடினார். இந்நிலையில் நேற்று கோட்டாத்தாங்கரை தெருவை சேர்ந்த சம்சா கடை உரிமையாளர் ஜக்கிரியா, கடைக்கு பைக்கில் செல்லும்போது, டில்லி காகிப் தெருவில் பை ஒன்று கீழே கிடப்பதை கண்டார். அதை எடுத்து பார்த்தப்போது, பையில், நகை இருந்தது தெரிந்தது. அந்த நகை பையை அவர் பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில்ஒப்படைத்தார். அவரின் நேர்மையை, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாராட்டினார். சதாசிவத்திடம் விசாரணை செய்து அவரது ஆறரை சவரன் நகையை போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர்.
11-Oct-2025