கீழே கிடந்த பர்சை ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு
பரங்கிப்பேட்டை: கீழே கிடந்த மணி பர்சை போலீசில் ஒப்படைத்த தொழிலாளியை, போலீசார் பாராட்டினர். பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மன்மதன், 43; கட்டட தொழிலாளி. இவர், நேற்று பரங்கிப்பேட்டைக்கு கட்டட வேலைக்கு சைக்கிளில் சென்றார். கரிக்குப்பம் முதியோர் இல்லம் அருகே செல்லும்போது கீழே பர்ஸ் ஒன்று கிடந்தது. அந்த பர்சில், 970 ரூபாய், 3 ஏ.டி.எம்., கார்டு, ஆதார் மற்றும் இன்சூரன்ஸ் கார்டு, ஒரு கிராம் வெள்ளி காயின் இருந்தது.அந்த பர்சை, மன்மதன் பரங்கிப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அவரை பாராட்டினர். ஆதார் கார்டில், திருஞானசம்மந்தம், நெல்லி தோப்பு பாண்டிச்சேரி என விலாசம் உள்ளது. ஆனால் மொபைல் எண் இல்லை. பர்சை பறி கொடுத்தவர் உரிய விவரங்கள் கூறி பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.