மேலும் செய்திகள்
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
30-Jun-2025
கடலுார்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுார் திரவுபதி அம்மன் கோவிலில், வரும் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுார் திரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் 13ம் தேதி காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள், மதியம் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. மாலை புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல், யாக சாலை பூஜைகள், இரவு 8:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம் நடக்கிறது.14ம் தேதி காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி, திருமுறைகள் பாராயணம் நடக்கிறது. 9:45மணிக்கு கலசம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு கோவில் விமானத்திலும், 10:15 மணிக்கு மேல் திரவுபதி அம்மன் கோவில் கலசத்திலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.
30-Jun-2025