மேலும் செய்திகள்
108 பால்குட ஊர்வலம்
18-Jan-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கொம்பாடிகுப்பம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.விருத்தாசலம் அடுத்த பொன்னாலகரம், கொம்பாடிகுப்பம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, கடந்த 31ம் தேதி பூஜைகள் துவங்கியது.நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.நேற்று காலை நான்காம் கால பூஜையும், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, திரவுபதியம்மன் கோவில் கோபுரத்தில் வேத விற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தினர்.பின்னர், மூலவருக்கு கும்பாபிேஷகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.இரவு திருக்கல்யாணம், திருவீதியுலாவந்து திரவுபதி அம்மன் அருள்பாலித்தார்.ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
18-Jan-2025