வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு தச தானம், யாத்ரா தானம், மஹா கும்பங்கள், உத்ஸவர் புறப்பாடாகி , 8.30மணிக்கு மேல் மூலவர் விமானங்கள் மற்றும் தோரண வாயிலில் புனித நீர் தெளித்து மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஞானசுந்தரம், தக்கார் சரவணரூபன் , விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.