உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

 லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். கடலுார் லட்சுமி சோரடியா மேல்நிலைப் பள்ளி யில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு என்.எஸ்.எஸ்., சார்பில் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்து நாட்டு நலப்பணி திட்டங்களை செய்ய வேண்டும், ஒவ்வொருவரும் கண்டிப்பாக இரண்டு மரங்களை நடுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் என்.எஸ்.எஸ்., அலுவலர் மணிகண்டன் மேற்பார்வையில் டவுன் ஹால் எதிரில் இருந்து அரசு ஐ.டி.ஐ., வரை விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி