உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடி பகுதியில் தொழுநோய்  கண்டுபிடிப்பு முகாம்

திட்டக்குடி பகுதியில் தொழுநோய்  கண்டுபிடிப்பு முகாம்

திட்டக்குடி: திட்டக்குடி அருகே, தீவிர தொழுநோய் கண்டு பிடிப்பு முகாம் மற்றும் டெங்கு முன் தடுப்பு பணி நடந்தது. மங்களூர் வட்டாரம், இ.கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையா ளர் அறவாழி, சுகாதார ஆய்வாளர் விஜயரங்கன், மதனகோபால், முத்துச்செல்வன், செவிலியர்கள் சாவித்திரி, உமா, பிரியதர்ஷினி ஆகியோர் கொண்ட குழுவினர் கிராம மக்கள், பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி, குடிநீர் ஆய்வு, கொசுவினால் பரவும் நோய்கள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து நலக்கல்வி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ