உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்

தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்

திட்டக்குடி: திட்டக்குடி அருகே தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மங்களூர் வட்டாரம், ஈ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முகாம் நடந்தது. இதில், மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் சித்திரச்செல்வி தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன், வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர் அறவாழி, சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், பிரேம்குமார், மதனகோபால், மணிகண்டன், முத்துச்செல்வம் ஆகியோர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து தொழுநோய் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று, திட்டக் குடி, கூத்தப்பன்குடிக்காடு, வசிஷ்டபுரம், கோழியூர், பட்டூர் பகுதியில் தொழுநோய் பாதித்தவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை