உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம்: சிதம்பரத்தில் பெண் குழந்தைகளை காப்போம் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், பாலியல் குற்றங்களிலிருந்து, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு பேரணி நடந்தது. காந்தி சிலை அருகில் துவங்கிய பேரணியை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணியில்பள்ளி மாணவிகள் பதாகைகள் ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி, எஸ்.பி.கோவில் தெரு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக சென்று, தபால் நிலையம் அருகே முடிந்தது. மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் லட்சுமி வீரராகவலு, மருத்துவ அதிகாரி பார்வதி, இன்ஸ்பெக்டர்கள் தாரகேஸ்வரி, மகேஸ்வரி, விஷ்ணுபிரியா, ரேவதி, மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், ஜெயசீலி, இளவரசி மற்றும் ெஹன்றிராஜன், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை