உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒன்றிணைவோம் விழிப்புணர்வு பேரணி

ஒன்றிணைவோம் விழிப்புணர்வு பேரணி

கடலுார்'; கடலுார் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில் ஒன்றிணைவோம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகே துவங்கிய பேரணியை எஸ்.பி.,ராஜாராம் துவக்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஜாதி, மதம் வேண்டாம், சமத்துவம் காண்போம். மனிதநேயம் மலரட்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.லாரன்ஸ் ரோடு, பாரதி ரோடு, பழைய கலெக்டர் அலுவலகம் வழியாக சென்ற பேரணி, காவலர் நல திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. அங்கு நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் எஸ்.பி.,ராஜாராம் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் குசேலர், டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், ராமதாஸ், சவுமியா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ