உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சட்டத்தை மீறும் விதை விற்பனை நிலையங்கள் உரிமம் ரத்து: துணை இயக்குனர் எச்சரிக்கை

சட்டத்தை மீறும் விதை விற்பனை நிலையங்கள் உரிமம் ரத்து: துணை இயக்குனர் எச்சரிக்கை

கடலுார்: விருத்தாசலம் பகுதி விவசாய விதைப் பொருள்கள் விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி ஆவட்டி இப்கோ உழவர் பயிற்சி மையத்தில் நடந்தது.விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், 'விதை விற்பனையாளர்கள், விதை உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைகளை பெற்றவுடன், விதை மாதிரி எடுத்து, அதில் அதிகபட்ச முளைப்பு திறன் கொண்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பருவத்திற்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தங்களிடம் உள்ள விதைகளின் இருப்பு, ரகங்கள் மற்றும் விலை பட்டியலுடன் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.விதை கொள்முதல் செய்தமைக்கான கொள்முதல் பட்டியல், விதைக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், விதைகளுக்கான பதிவுச்சான்று, இருப்புப் பதிவேடு மற்றும் விற்பனை பட்டியல்கள் பராமரிக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெறாத அல்லது பதிவுச்சான்று இல்லாத விதைகளை விற்பனை செய்தல் கூடாது. விதை சட்டத்தை கடைப்பிடிக்காத விதை விற்பனை நிலையங்கள் உரிமம் ரத்து செய்து, உரிமையாளர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். விதை ஆய்வாளர்கள் கடலுார் செந்தில்குமார், விருத்தாசலம் தமிழ்பிரியன் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாய விதை பொருள் விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி