உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்னல் தாக்கியதில் கூரை வீடு எரிந்து சாம்பல்

மின்னல் தாக்கியதில் கூரை வீடு எரிந்து சாம்பல்

சிறுபாக்கம்; சிறுபாக்கம் அருகே மின்னல் தாக்கியதில் கூரை வீடு எரிந்து சாம்பலானது. சிறுபாக்கம் அடுத்த ரெட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 50. இவர், தனது மனைவியுடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். மழைக்காலத்தில் கூரை வீட்டிற்குள் மழைநீர் புகும் போது, அருகிலுள்ள தனது மகனுடைய ் வீட்டில் இருவரும் தங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், வழக்கம் போல் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மகனின் வீட்டில் தூங்க சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னல் தாக்கியதில் சுப்பிரமணியன் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அதில், வீட்டிலிருந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் உணவு பொருட்கள் முற்றிலும் தீயில் கருகியது. இது குறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ