மின் இணைப்பு இன்றி செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
சிதம்பரம்: சிதம்பரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். சிதம்பரம் நகர தேரோடும் வீதிகள், பஸ் நிலைய சாலையோரம், அருந்ததியர் இன மக்கள் 15 பேர் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக நேரடி மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தனர். கடந்த மே மாதம் , சிதம்பரத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, செருப்பு தைக்கும் கடைகள் அகற்றப்பட்டது. சில தினங்களில் மீண்டும் அதே இடங்களில் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 5 மாதகமாக மின் இணைப்பு இன்றி இரவு நேரத்தில் தொழில் செய்ய முயாமல் தவித்து வருகின்றனர். மின் துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மாறி மாறி கையை காட்டி வருகின்றனர். எனவே, செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருதி மீண்டும் மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.