உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய தொழில்முனைவோருக்கு கடனுதவி: கலெக்டர் தகவல்

புதிய தொழில்முனைவோருக்கு கடனுதவி: கலெக்டர் தகவல்

கடலுார் : புதிய தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கூறியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (நீட்ஸ்) அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெறுவதற்கு கடலுார் மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தமிழகத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 21 வயது முதல் 45 வயது வரை, சிறப்புப் பிரிவினர் 21 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.பிளஸ் 2 தேர்ச்சி, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் அதிகபட்சம் 5 கோடி ரூபாய் வரை ஆகும். 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை தொழில்முனைவோர் பங்களிப்பாகும்.தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசு நிலம், கட்டடம் மற்றும் இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீத மானியமாக (அதிகபட்ச மானியத்தொகை ரூ.75 லட்சம்) வழங்குகிறது. மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வழங்கப்படுகிறது.எனவே, ஆர்வமுள்ள முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலுார் அலுவலகத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04142-290116 வாயிலாக அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை