உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது  

லாட்டரி சீட்டு விற்றவர் கைது  

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மொபைலில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின்பேரில் நின்றவரை பிடித்து விசாரித்தபோது, பெ.கொல்லத்தங்குறிச்சி உலகநாதன்,55; என்பதும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை மொபைலில் விற்பனை செய்வதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து உலக நாதனை கைது செய்து, மொபைலை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !