மேலும் செய்திகள்
கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது
01-Aug-2025
கடலுார்: கடலுாரில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகணேஷ், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ரயில்வே ஸ்டேஷன் சைக்கிள் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுவண்டிப்பாளையம், நத்தவெளி ரோட்டைச் சேர்ந்த சரவணன்,51, என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
01-Aug-2025