மேலும் செய்திகள்
பள்ளியில் விஷம் குடித்த மாணவி
30-Oct-2024
நடுவீரப்பட்டு ; ஒரு தலைபட்சமாக போலீசார் வழக்கு பதிவு செய்தாக கூறி, நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தை பா.ம.க., வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அம்பேத்கார் நகரை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவருக்கும், சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்த காளிதாஸ், 24; என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 4 ம் தேதி பள்ளி முடிந்து அரசு பஸ்சில் வீட்டிற்கு வந்து மாணவரை, நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத்தில் காளிதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சிலம்பிநாதன்பேட்டை சதீஷ்,23, சொக்கநாதன்பேட்டை கணேஷ்,19; விஷ்ணுகுமார்,19; ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் மாணவர் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து, காளிதாஸ், சதீஷ், விஷ்ணுகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.தகவலறிந்த பா.ம.க., நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, சக்திவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டு, போலீசார் பாரபட்சமாக ஒரு தரப்பினர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ததாக கூறி, முற்றுகையிட்டனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், மற்றொரு தரப்பினர் கொடுத்த புகார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
30-Oct-2024