உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேவநாதசுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் கோலாகலம்

தேவநாதசுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் கோலாகலம்

கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவில் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூஜை கடந்த 29ம் தேதி துவங்கியது. நேற்று 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் பங்கேற்று வேதமந்திரங்கள் முழங்க பூஜை செய்தனர்.இன்று மஹாசாந்தி திருமஞ்சனம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, மஹாசாந்தி புரோக்ஷணம், பூர்ணாஹூதி நடக்கிறது.கும்பாபிேஷக தினமான நாளை காலை விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான மகா பூர்ணாஹூதி நடந்து, காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் திருவீதியுலா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணைஆணையர் பரணிதரன் தலைமையில் உதவி ஆணையர் சந்திரன் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை