மேலும் செய்திகள்
மகாவீர் ஜெயந்தி விழா ஊர்வலம், பிரார்த்தனை
11-Apr-2025
கடலுார்: திருப்பாதிரிபுலியூரில் மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி ஜைனர்களின் ஊர்வலம் நடந்தது. கடலுார் ஜெயின் சங்கம் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு சிந்தாமணி பாரஸ்நாத் ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைதொடர்ந்து கோவிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஜைனர்கள் ஆடல், பாடலுடன் கூடிய ஊர்வலம் நடந்தது.ஊர்வலம் சன்னதி தெரு, தேரடி வீதி, சுப்புராயலு தெரு, சஞ்சீவிராயன் தெரு, தண்டபாணி தெரு வழியாகச் சென்று ஜெயின் கோவிலை அடைந்தது. ஜெயின் சங்கம் சார்பில் ஏழை எளியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.சிந்தாமணி பாரஸ்நாத் ஜெயின் உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பஜனைகள் நடந்தது.
11-Apr-2025