உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டிய 5 ஆண்டுகளிலேயே பல் இளிக்கும் மலட்டாறு பாலம்; ஒப்பந்ததாரரை வசைபாடும் மக்கள்

கட்டிய 5 ஆண்டுகளிலேயே பல் இளிக்கும் மலட்டாறு பாலம்; ஒப்பந்ததாரரை வசைபாடும் மக்கள்

பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையம் மலட்டாறு பாலம் கட்டப்பட்டு 5 ஆண்டுகளிலேயே கான்கிரீட் தளம் வீணாகி கம்பிகள் வெளியே தெரிந்து பல் இளிக்கும் நிலை உள்ளது. பொதுப்பணித் துறையினரால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கட்டமுத்துப்பாளையம் மலட்டாறு பாலம் கட்டப்பட்டது. 20 அடி அகலமும் 100 அடி நீளமும் கொண்ட இந்த பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் கான்கிரீட் தளம் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கட்டமுத்துப்பாளையம், ராசாப்பாளையம், வரிஞ்சிப்பாக்கம், கொரத்தி, திருத்துறையூர், கரும்பூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாக உள்ளது. வாகனங்கள் அதிகளவில் செல்லும் இந்த பாலத்தினை ஏனோதானே என கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டும்போது அதிகாரிகள் பார்வையிட்டு சோதனை செய் திருந்தால் இதுபோன்ற பணி நடந்திருக்காது. ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் 5 ஆண்டுகளிலேயே சேதமானது பொதுமக்களிடையே அதிகாரிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பா லம் கட்டிய ஒப்பந்ததாரரையும் அதிகாரிகளையும் வசைபாடி செல்கின்றனர். பாலத்தை கலெக்டர் ஆய்வு செய்து, இதுபோன்ற பணிகளை செய்துள்ள ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர் வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி