உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

வாலிபர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

பரங்கிப்பேட்டை, ;பரங்கிப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கியவரை, போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கனக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 42; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துவேலுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், செந்தில்குமாரின் மனைவி சத்தியபிரியா,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, செந்தில்குமாரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கு,முத்துவேல் குடும்பத்தினர்தான் காரணம் என நினைத்து கடந்த 11ம் தேதி செந்தில்குமார், முத்துவேலை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முத்துவேல், செந்தில்குமாரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில், படுகாயமடைந்த செந்தில்குமார் சிதம்பரத்தில் உள்ள கடலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, செந்தில்குமாரின் தந்தை ரகுநாதன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின்லதா கொலை முயற்சி வழக்குப் பதிந்து, முத்துவேலுவை, 50; கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ