உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

நடுவீரப்பட்டு: பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் அருள்கொடி,32; இவர் டிராக்டர் டிப்பரில் மலையடிக்குப்பத்தில் உள்ள தமது நிலத்திற்கு உரம் ஏற்றிக்கொண்டு, பொதுப்பாதை வழியாக நிலத்திற்கு சென்றார். அப்போது மலையடிக்குப்பத்தை சேர்ந்த ரகுராமன், இவரது மகன் சந்தோஷ்குமார்,மனைவி ஜெயசுந்தரி ஆகிய மூவரும் டிராக்டரை வழிமறித்து, 'இந்த பாதையில் உங்களுக்கு இங்கு என்ன வேலை' என்று கேட்டு அருள்கொடியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் அருள்கொடி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரகுராமன், 43; சந்தோஷ்குமார்,ஜெயசுந்தரி ஆகிய 3 பேர்மீது வழக்கு பதிந்தனர். மேலும் ரகுராமனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை