உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காதலியை திருமணம் செய்ய மறுத்தவர் கைது

காதலியை திருமணம் செய்ய மறுத்தவர் கைது

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே காதலித்து நெருங்கி பழகிவிட்டு, திருமணத்திற்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த பகுதியை சேர்ந்தவர் 20 வயதுடைய பெண். கல்லுாரியில் படித்து வருகிறார். கிள்ளை அடுத்த பின்னத்துார் கிராமத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமத், 21; இருவரும் காதலித்து வந்தனர். அதைதொடர்ந்து, ரி யாஸ் அகமத், அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியுள் ளார். இந்நிலையில், ரியாஸ் அகமது, அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள மறுத்துவிட்டார். இது குறித்து, அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ரியாஸ் அகமதுவை, 21; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை