மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
04-Apr-2025
நெல்லிக்குப்பம் : புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்றிரவு மேல்பட்டாம்பாக்கம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் சந்தேகபடும்படி வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.விசாரணையில் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டை சேர்ந்த பத்மநாபன்,46; என்பது தெரிந்தது. உடன், போலீசார், வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 40 மது பாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்தனர்.
04-Apr-2025