தொழிற்சாலையில் மின் ஒயர் திருடியவர் கைது
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே உள்ள தொழிற்சாலையில் மின் ஒயர் திருடியவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த காணாதுகண்டான் கிராமத்தில் எரிசாரய தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் இயங்காமல் உள்ளது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இருந்த மின் ஒயர்கள் நேற்று முன்தினம் திருடு போனது.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.,காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.அதில், அரசகுழி கிராமத்தைச் சேர்ந்த ஜோலின் அருள்தாஸ், 38, என்பவர் மின் ஒயர்களை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜோலின் அருள்தாசை கைது செய்தனர்.