உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மஞ்சுவிரட்டு விழா

மஞ்சுவிரட்டு விழா

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று மாட்டு பொங்கல் திருவிழா நடந்தது.அதையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு விநாயகர்,பெருமாள், கைலாசநாதர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்து.தொடர்ந்து, முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள திடலில் மஞ்சுவிரட்டு நடந்தது. அதேபோல் சி.என்.பாளையம் பெருமாள் கோவிலில் நேற்று மாட்டுபொங்கலை முன்னிட்டு ஸ்ரீதேவி பூமாதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, சொக்கநாதர் தோப்பில் மஞ்சுவிரட்டு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை