மேலும் செய்திகள்
விநாயகர் கோவிலில் 11ம் தேதி கும்பாபிஷேகம்
09-Sep-2025
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், வரும் 16ம் தேதி மண்டலாபிஷேக நிறைவு விழா நடக்கிறது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், கடந்த ஆக.28ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கி நடந்து வருகிறது. வரும் 16ம் தேதி, மண்டலாபிஷேக நிறைவு விழா நடக்கிறது. காலை 9 மணி முதல் மகா கும்ப பூஜைகள், ஆஞ்சநேய காயத்ரி ஹோமம், ஆஞ்சநேய சகஸ்ர நாம ஹோமம், மண்டலாபிஷேக சாந்தி பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து மூலவர், உற்சவர் திருமஞ்சனம், அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஞானசுந்தரம் மற்றும் நிர்வாகத்தினர், அர்ச்சகர் தேவநாதன் செய்து வருகின்றனர்.
09-Sep-2025