மேலும் செய்திகள்
விருது பெற்ற அலுவலர்கள்
27-Aug-2025
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. கல்லுாரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் ஜெயசுதா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரபு வரவேற்றனர். டாக்டர்கள் அனுஷா, சந்தோஷ்குமார் ஆகியோர் தலைமையில், ஆயங்குடி முதன்மை சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில், 390 மாணவ, மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை செய்யப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சித்திவிநாயகம் நன்றி கூறினார்.
27-Aug-2025