உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருத்துவ முகாம்: நாளை ஏற்பாடு

மருத்துவ முகாம்: நாளை ஏற்பாடு

கடலுார்: காட்டுமன்னார்கோவில் அடுத்த ராயநல்லுார் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நாளை 26ம் தேதி இலவச பொது மருத்துவ முகாம் நடக்கிறது. மருதநில மைந்தர்கள் நற்பணி மன்றம், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. முகாம் நாளை காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. பொது மருத்துவம், காது, மூக்கு தொண்டை, கண், எலும்பு, நுரையீரல், தோல் உள்ளிட்ட நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை