மேலும் செய்திகள்
அம்மன் கோவிலில் நகை திருட்டு
25-Oct-2025
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே மாயமான பால் வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் செந்தில், 64; கடை வீதியில் பால் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்து பால் வியாபாரத்திற்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு தனது பைக்கில் சென்றார். இதையடுத்து சிறிது நேரம் கழித்து அவரது மனைவி, ஜெயலட்சுமி பால் கடைக்கு சென்ற போது கடை திறக்கப்படாமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் நாட்டார்மங்கலம் நாரையேறி கால்வாய் அருகில் செந்தில் பயன்படுத்தும் பைக் மற்றும் மொபைல் இருந்தததாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். ஏரிக்கரை கால்வாய் அருகில் அவருடைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் இயற்கை உபாதை கழித்துவிட்டு ஏரியில் இறங்கும் போது மூழ்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறி, காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு படைவீரர்கள் நாரை ஏரியில் முழுவீச்சில் தேடி வருகின்றனர். இது குறித்து ஜெயலக்ஷ்மி புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
25-Oct-2025