ரூ.5 கோடிக்கு திட்டப்பணிகள் அமைச்சர் கணேசன் பெருமிதம்
சிறுபாக்கம்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, சிறுபாக்கம் அடுத்த பனையாந்துாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலர்கள் செங்குட்டுவன், அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தனர்.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி குமணன் வரவேற்றார். அமைச்சர் கணேசன் கட்சி கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தி.மு.க., நிர்வாகிகள் சேகர், திருவள்ளூவன், ராஜசேகர், ராமதாஸ், சின்னதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசுகையில், கிராம மக்களின் மீது அக்கறை கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். பனையாந்துார் கிராமத்தில் ரூ. 5 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.