மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றம் அமைச்சர் கணேசன் பேச்சு
சிறுபாக்கம் : மங்களூர் பகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி வருவதாக அமைச்சர் கணேசன் பேசினார்.சிறுபாக்கம் அடுத்த ஒரங்கூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி திறப்பு விழா நடந்தது.மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். கூட்டுறவு மண்டல பதிவாளர் ரவிச்சந்திரன், விருத்தாசலம் சப் கலெக்டர் சையத் மெஹ்மூத், துணை பதிவாளர் சவிதா, வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலர்கள் செங்குட்டுவன், சின்னசாமி, அமிர்தலிங்கம், பாவாடை கோவிந்தசாமி, ஊராட்சி தலைவர் தமிழரசி செல்வராசு, துணை தலைவர் தில்லையம்மாள் காசிராஜா, தி.மு.க., நிர்வாகிகள் சேகர், குமணன், ராமச்சந்திரன், திருவள்ளுவன், ராஜசேகர், ஊராட்சி செயலர் சத்தியமூர்த்தி, வங்கி செயலர் கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில், அமைச்சர் கணேசன், வங்கியை திறந்து வைத்து, பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பின் தங்கிய கிராமங்களில் அடிப்படை வசதிகள் உட்பட பல வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்.மங்களூர் ஒன்றிய பகுதிகளிலிருந்து பெங்களூரு, சென்னை, கடலுார் நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஒரங்கூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களை நியமித்து விரைவில் திறக்கப்படும். ரூ.50 லட்சத்தில் திருமண மண்டபம் விரைவில் கட்டப்படும். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு உயர்நிலைப்பள்ளி விரைவில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். மங்களூர் ஒன்றிய பகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.