புதிய தாசில்தார் அலுவலகம் கட்ட குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் ஆய்வு
கடலுார்; குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில். புதிய தாசில்தார் அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது குறித்து, அமைச்சர் ஆய்வு செய்தார். கலெக்டர் சிபி ஆதித்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆய்வின்போது அமைச்சர் கூறியதாவது:கடலுார் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றாக குறிஞ்சிப்பாடியில் புதிய தாசில்தார் அலுவலக கட்டடம் அமைக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி குறிஞ்சிப்பாடி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய தாசில்தார் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலகத்தின் மூலம் தொடக்கக் கல்வி துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 113 தொடக்கப் பள்ளிகளும் 28 நடுநிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன. அவ்வாறு இயங்கும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் பணிகளையும் மற்றும் பள்ளிகளின் அனைத்து செயல்பாடுகளையும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.