வளர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர் ஆய்வு
சிதம்பரம்: சிதம்பரத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள், பழைய பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிகள், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். பின், அவர் கூறுகையில், 'மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு, சிதம்பரம் நகர பஸ் நிலையம் நவீன பஸ் நிலையமாக்க 4.47 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது. சிதம்பரம், அண்ணாமைல நகருக்கு குடிநீர் வழங்கும் வகையில், 255.64 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. குழாய் பதித்தல் உள்ளிட்ட 71 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகளை விரைவுபடுத்த வாரந்தோறும் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சப் கலெக்டர்கிஷன்குமார், நகராட்சி கமிஷனர் மல்லிகா, இன்ஜினியர் சுரேஷ், தி.மு.க.,பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன் உடனிருந்தனர்.