/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தி.மு.க.,வினருக்கு அமைச்சர் அட்வைஸ்
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தி.மு.க.,வினருக்கு அமைச்சர் அட்வைஸ்
சிறுபாக்கம்: மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாமில் ஈடுபட வேண்டுமென, மேற்கு மாவட்ட செயலர், அமைச்சர் கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை;தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் இன்று (16ம் தேதி) மற்றும் நாளை ((17ம் தேதி), வரும் 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. அதில், வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய வாக்காளர்களை சேர்த்தல் பணிகள் நடக்கிறது.முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின்படி, மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமு.க., மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய, கிளை, வார்டு செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் உட்பட அனைவரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாமில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.