மேலும் செய்திகள்
கடலுாரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
26-Apr-2025
கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 7 லட்சம் ரூபாயை வைப்பு நிதியாக, அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார்.கடலுார், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வைப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை செந்தமிழ்செல்வி, சுரேஷ்மல் சோரடியா முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., அரசுப் பள்ளிக்கு வைப்பு நிதியாக 7 லட்சம் ரூபாயை முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பனிடம் வழங்கினார். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், கவுன்சிலர் சுமதி ரங்கநாதன், கோல்டன் சிட்டி லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் சண்முகம், கிளப் தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் சேதுராமன், பொருளாளர் விஜயன், ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Apr-2025