உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரச்சிற்ப கண்காட்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

மரச்சிற்ப கண்காட்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் தமிழ்நாடு கைத்தறி தொழிற்சங்க கழகம் சார்பில் மரச்சிற்ப கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நடந்தது.சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி கண்காட்சி மற்றும் விற்பனையை துவக்கி வைத்தார். கிளை மேலாளர் கார்த்தி, முதுநிலை விற்பனை உதவியாளர் திலாக ஆகியோர் பங்கேற்றனர். கண்காட்சியில் வாகை மரத்தினால் உருவாக்கப்பட்ட பல வகை மரச்சிற்பங்கள், வீட்டு அழகு பொருட்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், செம்மரத்தினால் செய்த கலை பொருட்கள், புத்தர், யானை உருவச்சிலைகள், சந்தன மாலை, பூஜை சாமான்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 36 ரூபாய் முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரையிலான கைவினைப் பொருட்கள் உள்ளன. வாடிக்கையாளர் வாங்கும் பொருளுக்கு ஏற்ப சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கண்காட்சி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை