உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறப்பு

காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறப்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மடவாப்பள்ளம் மீனவ கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய காத்திருப்போர் கூடம் திறப்பு விழா நடந்தது. பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர். கிராம தலைவர் அக்னி வீரன் வரவேற்றார். பாண்டியன் எம்.எல்.ஏ., காத்திருப்போர் கூடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, கொத்தட்டை ஊராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, அகிலநாயகி அருள்மணி, முன்னாள் ஊராட்சி தலைவர் ராம்மகேஷ், பிரவீன், மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை