மேலும் செய்திகள்
துருவை கிராமத்தில் புதிய தார் சாலை பணி
13-Jun-2025
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது. விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, கனிமவள திட்ட நிதி 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதிதாக கட்டி திறக்கப்பட்டது.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், கிளை செயலாளர்கள் விஜயகுமார், தங்கதுரை, ஊராட்சி செயலர் செந்தில், முன்னாள் ஊராட்சி துறை தலைவர் வீரபாண்டியன் உடனிருந்தனர்.
13-Jun-2025