மாணவர்களுக்கு மடிக்கணினி எம்.எல்.ஏ., வழங்கல்
நெய்வேலி; நெய்வேலி தொகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மடிக்கணினி வழங்கினார். நெய்வேலி தொகுதி, கீழ்காங்கேயன்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்தவர் முருகன் மகள் அபிராமி. விசூர் ஊராட்சி, ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வெற்றிவேல். இருவரும் வெவ்வெறு அரசு பள்ளிகளில் படித்தனர். தற்போது அபிராமி சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.டெக்., இறுதியாண்டும், வெற்றிவேல், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., மெக்கானிக்கும் படிக்கின்றனர். இருவருக்கும் இறுதியாண்டு புரோஜெக்ட் ஒர்க் கல்வி பணிக்காக மடிக்கணினி தேவைப்பட்டது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மடிக்ணினி வழங்கக் கோரி சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், அவர் சொந்த செலவில் 1 லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவி அபிராமி, மாணவர் வெற்றிவேலுக்கு மடிக்கணினி வழங்கினார்.